குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு 1 மாதம் சிறை

சிற்றுந்து
சிற்றுந்து

ஜன-23 மாலை 7 மணியளவில் குமாரபாளையத்திலிருந்து 30 பயணிகளுடன் பேருந்து புறப்பட்டது. ராஜம் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பேருந்து தடுமாறியபடி வந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர்.
அப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் பேருந்தை மறித்து நிறுத்தி டிரைவரை சோதித்தார். அப்போது டிரைவர் குமரேசன்(22) குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குமரேசனை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். இதில் குமரேசன் மது அருந்தி இருந்தது உறுதியானது.
அதனால் நேற்று(ஜன-24) திருச்செங்கோடு நீதிமன்றத்தில் குமரேசனை போலீசார் ஆஜர்படுத்தினர். 30 பயணிகளுடன் மினி பேருந்தை குடிபோதையில் ஓட்டி ஆபத்தை ஏற்படுத்த முயன்ற குமரேசனுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published.