கார் மோதி மேஸ்திரி பரிதாப சாவு

சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது நண்பர் ராஜா(26).  கட்டிட மேஸ்திரிகள். நேற்று முன்தினம் இருவரும், சேந்தமங்கலத்தில் இருந்து பைக்கில் கரூர் சென்றனர். பின்னர் கரூரில் இருந்து சேந்தமங்கலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி பைபாஸ் பிரிவு ரோடு அருகே வந்த போது அவ்வழியாக வந்த கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா பலத்த காயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.