கடைவீதியில் வழிந்தோடும் சாக்கடை கழிவு நீரால் மக்கள் அவதி

நாமக்கல் கடைவீதி
நாமக்கல் கடைவீதி

கடைவீதியில் சாக்கடை கழிவு நீர் வழிந்தோடுவதால், துர்நாற்றம் வீசுவதோடு, அங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நாமக்கல் நகராட்சி 20வது வார்டில் ரங்கநாதர் சன்னதி, கடைவீதி போன்ற முக்கிய பகுதிகள் உள்ளன. இரு பகுதியிலும் நகைக் கடை, ஜவுளிக் கடைகள் நிறைந்துள்ளன.

நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். அவ்விரு வீதிகளிலும் சாலை மோசமான நிலையில் இருப்பதுடன், சாக்கடை வசதியும் இல்லை. அதனால், நகரின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் முழுவதும் கடைவீதி சாலையில் வழிந்தோடுகிறது.
சாக்கடை கழிவு நீரில், மக்கள் சறுக்கி விழும் அவலமும் நிலவுகிறது. இதுபற்றி அப்பகுதி வியாபாரிகள் சிலர் கூறுகையில்,

“கடைவீதியில் சாலை போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணி துவங்கப்படவில்லை. சாக்கடை வசதியும் இல்லாததால், கடைவீதி வரும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னை மாதக் கணக்கில் நீடிக்கிறது. நகராட்சி நிர்வாகத்தினர் சாலை, சாக்கடை வசதியை விரைந்து ஏற்படுத்தினால் யனாக அமையும்’ என்றனர்.

One Response to "கடைவீதியில் வழிந்தோடும் சாக்கடை கழிவு நீரால் மக்கள் அவதி"

  1. Karthikeyan   January 30, 2012 at 10:43 pm

    ஐயா ரொம்ப நன்றி, என்னால நடக்க முடியல அங்க,அத மொதல்ல சரி பண்ண சொல்லுங்க…

    Reply

Leave a Reply

Your email address will not be published.