ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு இலவச பயிற்சி துவக்கம்

 

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.
நாமக்கல் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் கலந்து கொள்ள மாணவ, மாணவியருக்கு இங்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி துவக்க விழா ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
இந்த மையத்தில் பயிற்சி பெற 179 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு 60 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் திறமை உள்ளது. அந்த திறமையை வெளிக் கொணர்வதற்கு உரிய ஆலோசனை மற்றும் பயிற்சிகள் அவசியம்.
மையத்துக்கு வரும் மாணவ, மாணவியர் நல்ல முறையில் பயிற்சி எடுத்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற தேர்வுகளை எழுத வேண்டும். அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான பயிற்சி என்பதை மனதில் நிலை நிறுத்தி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இங்கு பயிற்சிக்கு வந்துள்ள மாணவ, மாணவியரின் முதல் குறிக்கோள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுதி அதில் வெற்றி பெற வேண்டும் என்பதாகும். இவ்வாறு ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.