ஏழை மாணவனின் மருத்துவ கல்வி படிப்புக்கு முதல்வர் ஜெ., உதவி

நாமக்கல் மாவட்டம், கோழிக்கல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவக் கல்விக்கு தேர்வு செய்யப்பட்டார்.  பணம் இல்லாமல், மருத்துவக் கல்வியை தொடர முடியாமல் தவித்து வந்தார்.

இதை, பத்திரிகை வாயிலாக அறிந்த முதல்வர் ஜெயலலிதா, முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக்காக, 73,000 ரூபாயை கோபிநாத்துக்கு, நேற்று வழங்கினார். மேலும், நான்கு ஆண்டுகள் மருத்துவக் கல்விக்கான புத்தக செலவுகள், உணவு, விடுதி கட்டணங்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை சார்பாக வழங்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.