ஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு!

சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்த தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரூபாய் ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 6 ஆயிரம் தரப்படும் எனக் கூறி, சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம் பலரிடம் பணம் வசூல் செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துûறையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு மாதமாக லாப தொகையை வழங்கவில்லை என்பது முதலீட்டார்கள் புகார் கூறியுள்ளனர். நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டால், சரியான பதில் வராததையடுத்து இரண்டாவது நாளாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவன அலுவலகத்தின் முன்பு திரண்டனர்.

இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஈரோடு மாவட்ட வருவாய்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். முதலீட்டார்களின் புகாரையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு பிரபல தமிழ் நடிகர்கள் சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவன விளம்பரங்களில் தோன்றி விடுத்த அழைப்பை நம்பியே பல இலட்சங்களை முதலீடு செய்ததாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து இரண்டு நடிகர்கள் உள்பட 10 பேர் மீது பெருந்துறை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி :நக்கீரன்

Leave a Reply

Your email address will not be published.