இரத்த தானம் செய்வோர் தகவல் பதிவு செய்ய புதிய இணையதளம்

ரத்ததானம் செய்ய விரும்வோர் பெயர் பதிவு செய்ய, புதிதாக இணையதளம்
ரத்ததானம் செய்ய விரும்வோர் பெயர் பதிவு செய்ய, புதிதாக இணையதளம்

“ரத்ததானம் செய்ய விரும்வோர் பெயர் பதிவு செய்ய, புதிதாக இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், இரண்டு லட்சம் தன்னார்வ ரத்த கொடையாளர் பதிவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது”  என்று,  மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும் இணைந்து ஒரு புதிய இணையதள பதிவை துவக்கியுள்ளது. தமிழ்நாடு கவர்மெண்ட் பிலட் பேங்க் என்பது இணையதளத்தின் பெயர். தன்னார்வ ரத்த கொடையாளர்கள், தங்கள் பெயர்களை அந்த இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
அந்த இணையதளத்தில், இரண்டு லட்சம் தன்னார்வ ரத்த கொடையாளர்களின் பெயர் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரத்த கொடையாளர்கள் அந்த இணைய தளத்தில், பெயர்களை பதிவு செய்வதன் மூலம் ரத்தம் தேவைப்படும் நபர்களுக்கு உரிய நேரத்தில் பாதுகாப்பாகவும், தேவையான அளவும் ரத்தம் கிடைக்க வழி ஏற்படும்.
அந்த இணையதளத்தில் பதிவு செய்யும் தன்னார்வ ரத்த கொடையாளர்களின் பெயர்கள், அந்த மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கி மருத்துவர்கள் மற்றும் ஆர்.ஆர்.சி., திட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படும். உயிர்காக்க ரத்ததானம் செய்த ரத்த கொடையாளர்களுக்கு, நன்றி தெரிவித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
மூன்று மாதங்களுக்கு பின், நீங்கள் ரத்தம் வழங்க தகுதியுடையவர் எனும் நினைவூட்டு எஸ்.எம்.எஸ்., ரத்த கொடையாளர் மொபைல் போனுக்கு அனுப்பப்படும். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ரத்த தானம் செய்ய முன்வருபவர்கள் தங்களது பெயரை அந்த இணையளத்தில் பதிவு செய்யலாம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.