இன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில்

இன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில்

சேலம்,நாமக்கல்,கரூர் இடையே சரக்கு இரயில் போக்குவரத்து இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று மதியம்(15.11.2012) முதல் முதலாக சரக்கு இரயில் விடப்பட்டுள்ளது. சரக்கு இரயில் சேலம்-கரூர் இடையே முதல் கட்டமாக இயக்கப்படுகிறது. மிக விரைவில் பயணிகள் இரயிலும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினம் ஒரு தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நாமக்கலில் தற்போது இரயில் போக்குவரத்தும் துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரக்கு இரயில் வருகையை காணவந்த பொதுமக்கள் கூறுகையில் :

பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் இரயில் இயக்கப்படுகிறது, அதுவும் சரக்கு இரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. பயணிகள் இரயில் இயக்கப்படவில்லை. விரைவில் பயணிகள் இரயிலும் இயக்கப்பட்டால் மக்களுக்கு பயனளிக்கும்.

அதேபோல் இரயில் முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என கூறினர்.

One Response to "இன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில்"

  1. DEEPAK   December 7, 2012 at 10:00 pm

    1) when passenger train will coming …………………………..
    2) when booking will start in online………………….
    3) which places are going……………….

    Reply

Leave a Reply

Your email address will not be published.