இன்று சந்திர கிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாம்

இன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தை, வெறும் கண்ணால் பார்க்கலாம்’ என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம், டிச., 10ம் தேதி வருகிறது. இந்திய நேரப்படி, மாலை 6.15 மணிக்கு துவங்கும் கிரகணம், 7.35 மணிக்கு மேல்  உச்சத்தை அடைகிறது.

இரவு 9.48 மணிக்கு முடிகிறது.இந்தியா, ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில், இக்கிரகணம் தெரியும். இதை, திறந்தவெளியிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கலாம். இக்கிரகணத்தை பொதுமக்கள் காண, சென்னையிலுள்ள, பிர்லா கோளரங்கத்தில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு  அய்யம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.