
நாமக்கல்லில் K.S திரையரங்கம் மற்றும் சக்திமயில் திரையரங்கில் வெளியாகியுள்ள நண்பன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
நண்பன் திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் த்ரீ இடியட்ஸ்(2009) ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும்.இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜயராஜ் இசை அமைத்துள்ளார்.
நண்பன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது. பிறகு தரடூன், ஐரோப்பா, அந்தமான், கோயம்பத்தூர் மற்றும் சென்னையில் நடைபெற்றது. பாடல் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முழுவதுமாக அக்டோபரில் நிறைவடைந்தது. மொத்தம் 8 மாதகாலம் படப்பிடிப்பு நடைபெற்றது.
2012ம் ஆண்டில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள தமிழ் படங்களில் ரசிகர்கள் எந்த படத்தினை மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்று சினிமா விகடன் இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.இதன் இறுதியில் நண்பன் திரைப்படம் – 1,19, 668 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றது. பிரெஞ்சு மொழியின் துணை உரை(Subtitle) உடன் பிரான்சு நாட்டில் வெளியாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் என்னும் பெருமை நண்பன் படத்தையே சேரும்.
Through this only i know this is first film going to release in France