இந்திய குரங்கு எல்லை தாண்டியதாக கூறி பாகிஸ்தானில் சிறைபிடிப்பு

தெரிந்தோ தெரியாமலோ இந்திய எல்லையில் இருந்து வழி தடுமாறி சென்ற குரங்கை பாகிஸ்தான் வனத்துறையினர் சிறை பிடித்தனர் . அது இந்தியாவிலிருந்து  உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என்று  அதிகாரிகள் குரங்கை சோதித்து வருகின்றனர். தற்போது அக்குரங்கு பாகல்பூர் மிருக காட்சி சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லை பகுதியிலிருந்து தெரியாமல் எல்லை தாண்டிய குரங்கு, பாகிஸ்தான் மாநிலம் பாகல்பூர் பகுதிக்கு தெரியாமல் தாவியோடி விட்டது. அதை, அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து, பிடிக்க பல முறை முயன்றும், அது அவர்களுக்கு “பெப்பே’ காட்டி விட்டு, மரம் விட்டு மரம் தாவியது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து, குரங்கை தீவிரமாக தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, குரங்கு வனத்துறையினரின் கண்களில்பட்டது. அதை பிடிக்க வனத்துறையினர் முயன்றும் நீண்ட நேரம் போராட்டம் நடத்தி,பிறகு ஒருவழியாக அந்த இந்திய குரங்கை பிடித்தனர். உடனடியாக அந்த குரங்கை  அங்குள்ள மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டது. அந்த குரங்கிற்கு  அங்குள்ள அதிகாரிகள் “பாபி’ என பெயர் சூட்டி அழைத்து வருகின்றனர்.

பாபி என்ற  இந்தியாவில் இருந்து வந்த குரங்கு  பாகிஸ்தானை உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என அதிகாரிகள் அந்த பாபியை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்தாண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறாவை உளவு பார்க்க வந்த தூதர் எனநம்பி , இந்திய அதிகாரிகள் அதை பிடித்து பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.