இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு

Petrol-Bunk
  நாமக்கல்லில் புதன்கிழமை  இரவு பெட்ரோல் நிரப்ப அலைமோதிய மக்கள் கூட்டம்

இதுவரை இல்லாத வகையில் பெட்ரோலின் விலை ஒரே முறையில் லிட்டர் ஒன்றுக்கு ஏழு ரூபாய் ஐம்பத்து நான்கு காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் வந்துள்ள முதலாவது விலை உயர்வு இதுவாகும். புதன் நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வருகிறது.

டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை.

எண்ணெய் வர்த்தக நிறுவனங்களை திவாலாவதிலிருந்து காப்பாற்றவே இந்த விலையேற்றம் என அரசு கூறுகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணம் என பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில், மற்ற மற்ற பொருட்களும் விலையேற இது வழிவகுக்கும் என்று அச்சங்கள் வெளியாகியுள்ளன.

இந்த விலையுயர்வை திரும்பப்பெற வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான பாஜக மற்றும் ஆளும் கூட்டணியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் கோரியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.