இந்தியன் வங்கியின் கடன் வசூல் முகாம்

இந்தியன் வங்கியின் ராசிபுரம் கிளை சார்பில், லோக் அதாலத் மூலம் கடன் வசூல் முகாம் நடந்தது.
ராசிபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடந்த முகாமில் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் செழியன், சார்புநீதிமன்ற நீதிபதி சாய்சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபால், வங்கியின் சேலம் மண்டல உதவி பொதுமேலாளர் தங்கவேல் ஆகியோர் முகாமை நடத்தினர். இதில் ராசிபுரம், வடுகம், அத்தனூர், தொ.ஜேடர்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். முகாமில், 60 வாடிக்கையாளர்களிடம் இருந்து, 36.12 லட்சம் ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டது.
வங்கியின் சார்பில் நடைபெற்ற வீட்டுக்கடன், வாகனக்கடன் வழங்கும் முகாமில், ராசிபுரம் கிளை மேலாளர் ராஜசேகர் வரவேற்றார். வங்கி உதவி பொதுமேலாளர் தங்கவேல், வங்கியின் சேவைகள் குறித்து பேசினார். ராசிபுரம் நகராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம், கடன் வழங்கும் முகாமை துவக்கி வைத்தார். இதில், 60 பயனாளிகளுக்கு, 5.64 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.