ஆம்புலன்ஸ் மீது பீர் பாட்டில் வீச்சு

நாமக்கல்லில் இருந்து மோகனூருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது. நெய்க்காரப்பட்டி அருகே சென்ற போது மோகனூரில் இருந்து சங்ககிரிக்கு ஒரு பயணிகள் வேன் வந்தது. அந்த வேனுக்குள் இருந்த ஒருவர் திடீரென பீர் பாட்டிலை தூக்கி வீசினார். அந்த பாட்டில் ஆம்புலன்ஸ் மீது விழுந்தது. இதில் கண்ணாடி உடைந்து, டிரைவர் சுரேஷ்குமார்(26) என்பவருக்கு காயம் ஏற்பட்டது.  சுரேஷ்குமார் காயத்துடன் அந்த பயணிகள் வேனை பின் தொடர்ந்து சென்று அனியாபுரம் பகுதியில் வழிமறித்தார். இதுகுறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், வேனில் இருந்த சங்ககிரியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (19) என்பவர் பாட்டிலை வீசியது தெரியவந்தது. மோகனூரில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட இவர்கள், சங்ககிரிக்கு திரும்பியுள்ளனர். அப்போது மது அருந்திவிட்டு, பாட்டிலை ஆம்புலன்ஸ் மீது எரிந்தது தெரியவந்தது.  இதை தொடர்ந்து கோபால கிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காயமடைந்த சுரேஷ்குமார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.