அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர் நியமிக்கவேண்டும் – சி.பி.ஐ., மாநாட்டில் கோரிக்கை

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என, மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய, நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,பள்ளிபாளையத்தில் 5 -வது மாநாடு  நடந்தது. நிர்வாகி நல்லப்பன் தலைமை வகித்தார். பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிவேல் அவர்கள் பங்கேற்று பேசினார். மாநாட்டில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர் இடங்கள்  கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. அதனால், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை.  எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து போதிய அளவு டாக்டர் மற்றும் செவிலியர்களை நியமிக்கவும், ஆம்புலன்ஸ் வசதி செய்துதர  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழை, எளிய மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி ஏற்படுத்த வேண்டும். மற்றும் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகரில் அதிக விசைத்தறித் தொழிலாளர்கள் வேலைசெய்வதால், இரவு ஒரு மணி வரை ஹோட்டல்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.