உங்கள் இணைய தளமான வணக்கம் நாமக்கல் இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.

இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்”
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
“இது எனதெ”ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். (புதிய)
உணர் வெனும் கனலிடை அபர்வினை எரிப்போம்
“ஒரு பொருள் தனி” எனும் மனிதரைச் சிரிப்போம்! (புதிய)
இயல் பொருள் பயன் தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம். (புதிய)
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்