அகில இந்திய கபடி போட்டி – பெரியார் பல்கலை அணி வெற்றி

அகில இந்திய அளவிலான பல்கலை கபடி போட்டியில், சேலம் பெரியார் பல்கலை அணி வெற்றி பெற்றது.ப.வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில், கபடி போட்டி நேற்று துவங்கியது.இன்று (டிச – 29) வரை நடக்கும் இப்போட்டியில், நான்கு பிரிவுகளில் 16 அணிகள் பங்கேற்கிறது.

மும்பை பல்கலை அணியும், மகாத்மாகாந்தி காசி வித்யா வாரனாசி பல்கலை அணியும் மோதுவதாக இருந்தது. ஆனால், மகாத்மாகாந்தி காசி வித்யா வாரனாசி அணி வராததால், மும்பை பல்கலை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அண்ணாமலை பல்கலை அணியும், எம்.டி.யு. ரோசாக் அணியும் மோதியதில், 32:22 என்ற புள்ளிகள் அடிப்படையில் எம்.டி.யு., ரோசாக் அணி வெற்றி பெற்றது.ஆர்.எஸ்.எஸ்., ரெய்பூர் பல்கலை அணியும், கோலாப்பூர் சிவாஜி பல்கலை அணியும் மோதியது. அதில் 34:12 என்ற புள்ளிகள் பெற்ற சிவாஜி பல்கலை அணி வெற்றி பெற்றது.

சணடிகர் பஞ்சாப் பல்கலை அணியும், சென்னை பல்கலை அணியும் விளையாடியதில், 32:20 என்ற புள்ளிகள் அடிப்படையில் சென்னை பல்கலை அணி வெற்றி பெற்றது.
புதுடில்லி பல்கலை அணியும், சேலம் பெரியார் பல்கலை அணியும் விளையாடியதில், 37:19 என்ற புள்ளிகள் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலை அணி வெற்றி பெற்றது. சிவாஜி பல்கலை அணியும், பர்தாவன் பல்கலை அணியும் மோதியதில், 34:19 என்ற புள்ளிகள் அடிப்படையில் பர்தாவன் பல்கலை அணி வெற்றி பெற்றது.குருஷேத்திரா பல்கலை அணியும், மேங்களூரு பல்கலை அணியும் விளையாடியதில், 29:26 என்ற புள்ளிகள் அடிப்படையில், குருஷேத்திரா பல்கலை அணி வெற்றி பெற்றது. பாரதி வித்யா பீத் பல்கலை அணியும், எல்.என்.விதயாலயா பல்கலை அணியும் விளையாடியதில், 49:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் பாரதி வித்யா பீத் பல்கலை அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.